சீரற்ற வானிலை எதிர்வரும் புத்தாண்டு வரையில் நீடிக்கும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தற்போது நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் புத்தாண்டு வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேநேரம் அதிக மழைக்காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் திறந்து விடப்பட்ட 6 வான்கதவுகளில் 4 தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளன.

அத்துடன் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின், 5 வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்து விடப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று முதல் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய அறிகுறிகள் உள்ள பகுதிகளில், இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply