சீனாவில் முதல் முறையாக பறவைக் காய்ச்சல் மனிதனுக்கு பரவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுவனை பரிசோதித்தபோது, பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
H3N8 திரிபு, முதல் மனித நோய்த்தொற்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் காகங்கள் மூலம் காய்ச்சல் பரவி உள்ளதாகவும், பெரிய அளவிலான தொற்று நோய்க்கான ஆபத்து குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow on social media