Skip to content
Ra Tamil
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • சர்வதேசம்
  • கல்வி
  • சினிமா
  • வர்த்தகம்
  • ஆரோக்கியம்
  • நம்மவர் படைப்புகள்
Menu

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க கோரிக்கை

Posted on April 16, 2022

லிற்றோ (12.5 கிலோ) சமையல் எரிவாயுவின் விலையை ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்குமாறு லிற்றோ நிறுவனம், நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

லிற்றோ சமையல் எரிவாயு தற்போது 2 ஆயிரத்து 675 ரூபாவுக்கு விற்பனையாகின்றது. இந்நிலையில் டொலர் இல்லாத காரணத்தால் எரிவாயு இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லிற்றோ எரிவாயு நிறுவனம் நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

அதேவேளை ஆயிரத்து 800 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவுடன், கப்பலொன்று கடந்த 12 ஆம் திகதி இலங்கை வரவியிருந்தது.

எனினும், டொலர் இல்லாத காரணத்தால் நிறுவனம் ஐந்து நாட்கள் எரிவாயு விநியோகத்தை நிறுத்தி இருந்தது. இந்த நிலையிலேயே மேற்படி கோரிக்கையை லிற்றோ நிறுவனம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
  • Facebook
  • Facebook Group
  • Twitter
  • YouTube
  • WhatsApp
  • Telegram
  • Google News

RA TAMIL

©2025 Ra Tamil | Design: Newspaperly WordPress Theme