சட்டத்தரணிகள் விடுத்த எச்சரிக்கை – பின்வாங்கிய பொலிஸ் படை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும். என வலியுறுத்தி போராட்டம் இடம்பெற்றுவரும் காலிமுகத்திடலுக்கு அருகில் ஏராளமான பொலிஸ் வானங்கள் குவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

மக்களின் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

எனவே இவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நாட்டு மக்களின் அமைதியான போராட்டம் எதுவாக இருந்தாலும், அதனை எந்த வகையிலும் சீர்குலைக்கும் முயற்சியை கண்டிப்பதாக கூறியுள்ளது.

மேலும் அத்தகைய முயற்சி நாடு, ஜனநாயகம், அதன் பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply