கொழும்பு காலிமுகத்திடல் மூன்றாவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்ட பகுதிக்கு வந்த பொலிஸார் அங்கிருந்து புகைப்படங்களை அடித்து உடைத்துள்ளனர்.
சிவிலில் வந்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்களால், கொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன லசந்த விக்ரமதுங்க, ப்ரகீத் எக்னெலிகொட போன்ற ஊடகவியலாளர்களின் புகைப்படங்களை உடைத்து வீசியுள்ளனர்.
நீதி வேண்டி கோட்டாகோகமையில் வைக்கப்பட்ட பதாகைகள் அடித்து நொறுக்கப்பட்டு ஜனாதிபதிக் காரியாலயத்திற்குள் வீசப்பட்டுள்ளது.
Follow on social media