கொழும்பிலிருந்து வடக்கிற்கு தப்பி ஓடிவந்த 11 பேர்; மூவருக்கு கொரோனா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கொழும்பிலிருந்து தப்பி ஓடிவந்த அளவெட்டி மற்றும் பூநகரி பகுதிகளை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்றிருந்த மேற்படி மூவர் அடங்கலாக 11 பேருக்கு கொழும்பில் பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு முன்பதாக இவர்கள் கொழும்பிலிருந்து வாகனம் ஒன்றில் தப்பி ஓடி வடக்கிற்கு வந்துள்ளனர்.

இவ்வாறு வந்தவர்களில் பூநகரியைச் சேர்ந்த ஒன்பது பேரும், பளை மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவருமாக 11 பேர் அடங்கியிருக்கின்றனர்.

அவர்களில் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த ஒருவருக்கும், பள்ளிக்குடாவைச் சேர்ந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் கொழும்பில் இருந்து வந்த தகவலுக்கமைய சுகாதாரப் பிரிவினர் அவர்களை கொரோனா சிகிச்சை மையங்களுக்கு மாற்றியுள்ளனர்.

இந்நிலையில் அவர்களின் குடும்பத்தினர், அவர்களுடன் வாகனத்தில் பயணித்தவர்கள், அவர்களின் குடும்பங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்

Follow on social media
CALL NOWPremium Web Hosting