கொரோனா தொற்றை கண்டறியும் முகக்கவசம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

புறஊதா கதிரை செலுத்தி கொரோனா தொற்றை கண்டறியும் சிறப்பு முகக்கவசத்தை, ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அறிகுறி இல்லாதவர்களுக்கு இத்தகைய எளிய முறையில், கொரோனா தொற்றை கண்டறியலாம் என கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முகக்கவசம் மீது நெருப்புக்கோழியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட அதன் செல்களை தடவி, பின்னர் அதன் மீது புறஊதா கதிரை செலுத்தினால், வைரஸ் தொற்று இருந்தால் அது ஒளிரும்.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

அடுத்தாண்டு ஆடி மாதம் முதல், இத்தகைய முகக்கவசத்தை வர்த்தகரீதியாக விற்பனைக்கு கொண்டு வர ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்..

Follow on social media
CALL NOW

Leave a Reply