கூட்டமைப்புடன் இணையத் தயார்- கருணா அதிரடி முடிவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையத் தயாராக உள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஸ்தாபகரும், பிரதமரின் நேரடி ஒருங்கிணைப்பாளருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, நாங்கள் பல தேர்தல்களுக்கு முகம்கொடுத்து பல வெற்றிகளை கண்டுள்ளோம்.

இதனால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் போன்ற இடங்களில் எமது கட்சியின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறோம்.

இம்முறை வடக்கில், முதன் முறையாக யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் எமது கட்சி போட்டியிடுவது தொடர்பாக எனது அமைப்பாளர் உடன் இன்று சந்திக்க உள்ளோம்.

தேசியக் கட்சிகளுடன் இல்லை – தமிழ் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தல்களை சந்திப்பேன் என்றார்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply