கூகுள் செயலில் உள்ள பிழையை சுட்டிக்காட்டிய மாணவன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கூகுள் செயலில் உள்ள பிழையை சுட்டிக்காட்டிய சென்னை மாணவருக்கு அந்நிறுவனம் பாராட்டி பரிசு வழங்கியுள்ளது.

உலகின் முன்னணி நிறுவனமான கூகுள், தகவல் பரிமாற்றம் முதல் செயலிகள் வரை அனைத்திலும் முக்கிய பங்காற்றி வருகிறது. அதேபோல் கூகுளில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டுபவர்களுக்கு அந்நிறுவனம் பரிசு வழங்கி பாராட்டி வருகிறது.

அந்த வகையில் கூகுள் செயலியில் உள்ள பிழையை கண்டுபிடித்த சென்னை மாணவருக்கு அந்நிறுவனம் பரிசு வழங்கி பாராட்டியுள்ளது.

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் கேசவன். இன்ஜினீயரிங் மாணவரான இவர், கூகுளில் ‘APPSheet’ எனப்படும் அப்ளிகேஷன் உருவாக்குவதற்கான செயலியில், வாடிக்கையாளர்களின் தகவல்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் சுலபமாக திருடப்படுகிறது ன கூகுள் நிறுவனத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளார். மாணவர் ஸ்ரீராம் கேசவன் அளித்த இந்த தகவலை அங்கீகரித்த கூகுள் நிறுவனம், அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,30,000 பரிசு தொகை வழங்கி பாராட்டியுள்ளது. மேலும் அவரது பெயரை கூகுள் ‘Hall of Fame’-ல் இணைத்து கௌரவித்துள்ளது. இந்த நிலையில் இன்ஜினீயரிங் மாணவர் ஸ்ரீராம் கேசவனுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply