கூகுள் குரோம் பயனர்களுக்கு எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கூகுள் குரோம் பிரவுசரில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ளதாக அதன் பயன்பாட்டாளர்களுக்கு மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூகுள் குரோமில் பல பாதிப்புகள் கண்டறியப்பட்டதாகவும், ‘ரிமோட் அட்டாக்’ எனப்படும் குறிப்பிட்ட கணினியை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துபவர்களின் அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையவழி தாக்குதலால் தனிப்பட்ட தகவல்கள் எளிதில் அவர்களால் பெறமுடியும் என்பதால், கூகுள் குரோமின் புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், 22 வகையான பாதுகாப்பு குறித்த பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு குரோம் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளதாக கூகுள் குரோம் தெரிவித்துள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting