காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காலி பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தமையை அடுத்து இன்று காலை அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
காலியில், இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்பினரால் கடந்த 15 ஆம் திகதி குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய தினம் காவல்துறையினரால் ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்துமாறும், அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தை அகற்றுமாறும் கோரப்பட்டிருந்தது.
எனினும் இன்று காலை வரை குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமையை அடுத்து அங்கிருந்த மக்களையும் கூடாரத்தையும் அகற்றுவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதன்போது அங்கு காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறும் மக்கள் போராட்டம் இன்று 9 வது நாளாகவும் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Follow on social media