காதல் நாடகமாடி சீரியல் நடிகையை ஏமாற்றிய வாலிபருக்கு நேர்ந்த கதி..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

காதல் நாடகமாடி சீரியல் நடிகையை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்குப்பதிவுசென்னையில் சின்னத்திரை நடிகையை காதலித்து திருமணம் செய்வதாக கூறி, மிரட்டி பணம் பறித்த வாலிபர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் சென்னையில் கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த சின்னத்திரை நடிகை கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் திருமங்கலம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் 11 சினிமாக்களிலும்,பல தொலைக்காட்சி தொடர்களில் நடிகையாகவும் நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது தோழி மூலம் அறிமுகமான கீழகட்டளையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை காதலித்து வந்ததாகவும், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்ததாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு நிகழ்ச்சிகளை எடுத்து நடத்தும் தொழில் செய்து வரும் ராஜேஷ்,விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை காட்டி பாலியல் ரீதியாக உடலுறவு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின் திருமண திகதி நெருங்க நெருங்க விருப்பம் இல்லாதது போல் நடந்து கொண்டதாக கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து ராஜேஷிடம் கேட்கும் போது தான், உடலுறவு கொள்ளவே திருமண நாடகம் நடத்தியது தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தொடர்ந்து தன்னுடன் எடுத்து வைத்திருந்த ஆபாச படங்களை வைத்து மிரட்டி சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய் அளவிற்கு பணத்தை வாங்கி உள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளித்தும் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதையடுது்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தையடுத்து , நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. அதனடிப்படையில் ராஜேஷ் குமார் மீது பாலியல் வன்கொடுமை செய்தது,மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவின்கீழ் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply