காதல் திருமணம் செய்து கொண்ட அண்ணன் – தங்கை; வீட்டை விட்டு ஓட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

நாட்றம்பள்ளி அடுத்த அன்சாகரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் இவருடைய மகன் ரத்தினகுமார் அதேபோல் அதே பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் இவருடைய மகள் பிரீத்தா. ரத்தினகுமாரும், பிரீத்தாவும் சிறுவயது முதலே ஒருவருக்கொருவர் நன்கு தெரியும் என்பதால் ஒரு கட்டத்தில் காதலர்களாக மாறியுள்ளனர். எல்லா காதல் ஜோடிகளையும் போலவே இவர்களின் காதலுக்கும் உறவினர்களால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த பெற்றோர்கள் எதிர்பதற்கு காரணம் தான் வித்தியாசமானதாக உள்ளது. ரத்தினகுமாரும், பிரீத்தாவும் அண்ணன் – தங்கை உறவுமுறை கொண்டவர்கள் என்பதே இவர்களின் காதலுக்கு எதிரியாக வந்துள்ளது.

ஆனாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். காவல்நிலையத்தில் வைத்து உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் காதல்ஜோடியை அனுப்பிவைத்தனர். ஒரே பகுதியைச் சேர்ந்த அண்ணன் தங்கை உறவுமுறை கொண்ட இளம்பெண்ணும், இளைஞரும் காதல் திருமணம் செய்துகொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5-ம் மாதம் இடம்பெற்ற இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய விவாதமாக எழுந்துள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply