கர்ப்பமாக இருப்பதாக கூறிய சமந்தா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கர்ப்பம் குறித்த கேள்விக்கு சமூக வலைத்தளத்தில் கிண்டலாக பதிலளித்துள்ளார்.

நடிகை சமந்தா கோலிவுட், டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

அவ்வாறு உரையாடும் போது அவரிடம் பெரும்பாலானோர் கேட்கும் கேள்வி உங்களுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்? என்பது தான்.

இதற்காக ஒவ்வொரு முறையும் பதில் சொல்லி சலித்துப்போன சமந்தா, தற்போது அளித்துள்ள பதில் என்னவென்று பார்ப்போம். “ஆமாம் நான் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து கர்ப்பமாக தான் உள்ளேன். ஏனோ தெரியவில்லை இந்த குழந்தை வெளியே வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது, என கிண்டலாக பதிலளித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply