முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ( கருணா) கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில் அவரை சந்திக்க சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
நேற்றைய தினம் முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணா அம்மானை சந்திக்க சென்ற குறித்த நபரை கடமையில் நின்ற பொலிசார் சோதனைக்குட்படுத்தினர்.
இதன்போது அவரிடமிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் குறித்த கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றை வயலிற்கு பசைளை இடுவதற்காக எடுத்து சென்றதாகவும், திரும்புகையில் கருண அம்மானை சந்தித்து செல்ல சென்றதாகவும் சந்தேக நபர் கூறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
Follow on social media