கத்தியை காட்டி தவறாக நடக்க முயன்றவரை கழுத்தை வெட்டிக் கொலை செய்த இளம்பெண்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இளம்பெண்ணை கத்தியை காட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட முயன்றவரின் கழுத்தை வெட்டிக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த இளம்பெண்ணின் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒரக்காடு அல்லிமேடு பகுதியில் சங்கர் என்பவரின் மகள் கௌதமி (19). இவரை அதே ஊரைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் அஜித்குமார் என்பவர் கௌதமியிடம் தகராறு செய்துள்ளார்.

கௌதமியை அருகிலுள்ள குதிரைப் பண்ணையில் உள்ள தோப்பிற்கு அழைத்துச் சென்று கத்தியை காட்டிமிரட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட முயன்றுள்ளான். அப்போது அவர் வைத்திருந்த கத்தியை பிடுங்கிய கௌதமி, அஜித்குமாரின் கழுத்தில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

பின்னர் சோழவரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அஜித்குமாரின் உடலை மீட்டு சோழவரம் போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஜித் குமாருக்கு சுகன்யா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் இளம் பெண்ணிடம் இவர் ஏற்கனவே தவறாக நடக்க முயற்சி செய்து பிரச்சனை ஆகியுள்ள நிலையில் மீண்டும் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றபோது அவரை கௌதமி வெட்டிக் கொன்றுள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply