கண்டியின் சில பகுதிகளில் நிலஅதிர்வு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கண்டி மாவட்டத்தில் சில பிரதேசங்களில் நேற்றிரவு (29) நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

கண்டி, அனுரகம பிரதேசத்தின் சில கிராமங்களில் பாரிய சத்தத்துடன் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நிலநடுக்கம் அல்ல என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியக பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் சஜ்ஜன டி சில்வா தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குறித்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணையொன்று இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply