ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் விடுத்த எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு வாங்குவதை படிபடியாக நிறுத்திக்கொள்ள மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் கோபம் அடைந்துள்ளன.

ரஷ்யா, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் இந்த நாடுகள், உக்ரைனுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.

இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்நாடு மீது பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றன.

அதேபோல், ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு வாங்குவதை படிபடியாக நிறுத்திக்கொள்ள மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், எங்களிடம் இருந்து எரிவாயு வாங்குவதை நிறுத்தினால், பொருளாதாரத்தில் கடும் எதிர்மறை தாக்கம் ஏற்படும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த விளாடிமிர் புடின் கூறுகையில்,

ரஷ்ய எரிவாயுவுக்கு பதிலாக மற்று வழிகளை முயற்சிக்கும் ஐரோப்பிய நாட்டிற்கு கடும் வேதனை ஏற்படும். ஐரோப்பாவுக்கு தற்போதை நியாயமான மாற்றும் எதுவும் இல்லை.

ஐரோப்பாவுக்கு பிற நாடுகளில் இருந்து கொள்முதல் செய்து குறிப்பாக அமெரிக்காவில் இருந்து எரிவாயு அனுப்பப்பட்டால், அது நுகர்வோர்களுக்கு கடுமையான விலையேற்றத்தை கொடுக்கும்.

இதனால், மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்படும். ஐரோப்பிய பொருளாதாரத்தில் போட்டித்தன்மை பாதிக்கும் என்றார்.

ஐரோப்பிய யூனியன் தங்களின் இயற்கை எரிவாயு தேவைக்கு 40 சதவீதம் ரஷியாவையே சார்ந்துள்ளது. அதேபோல், எண்ணெய் தேவையை 25 சதவீதம் ரஷ்யாவே பூர்த்தி செய்கிறது.

Follow on social media
CALL NOW

Leave a Reply