ஐக்கிய மக்கள் சக்தியின் பாதயாத்திரை கண்டியில் ஆரம்பமானது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அடக்குமுறையாளர்களை விரட்டுவோம்! மக்கள் சக்திக்காக அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள கண்டி முதல் கொழும்பு வரையிலான ஐக்கிய சக்தி பாதயாத்திரையானது, கண்டியில் இன்று காலை ஆரம்பமானது.

கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீP தலதா மாளிகைக்கு விஜயம் செய்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புத்தரின் புனித தந்தத்தை வழிபட்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டதோடு, சங்கைக்குரிய மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் நிகழ்த்தி எதிர்க் கட்சித் தலைவருக்கு ஆசீர்வதித்தனர்.

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் வரலாற்று சிறப்புமிக்க நாத தேவாலயத்திற்கு சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சமய நிகழ்வுகளில் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து பேரணி ஆரம்பமானது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply