பெற்றோல் கோரி இன்றும் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கு பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.
குறித்த தரப்பினர் பெற்றோல் கோரி வீதி மறியலில் ஈடுபட்டிருந்த நிலையில் மேலும் சிலர் வீதியை திறக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் இவ்வாறு பதற்றநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மதுரங்குளிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புத்தளம் – கொழும்பு வீதியை மதுரங்குளிய நகரத்தில் மூடுவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அங்கு பதற்றமான சூழல் நிலவியதுடன், பெருமளவான மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Follow on social media