ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.22.01 கோடி அபராதம் வசூல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது.

இந்நிலையில் தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஊரடங்கு மீறல் காரணமாக தமிழகத்தில் இதுவரை ரூ.22.01 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 9,99,837 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6,94,928 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 9,02,249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply