உலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.43 கோடியாக உயர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்


சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.


இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 43 லட்சத்து 22 ஆயிரத்து 327 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 68 லட்சத்து 49 ஆயிரத்து 335 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 28 ஆயிரத்து 876 பேர் உயிரிழந்துள்ளனர்.


வைரஸ் பரவியவர்களில் 66 லட்சத்து 44 ஆயிரத்து 116 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 863 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா       –  பாதிப்பு – 59,99,577, உயிரிழப்பு – 1,83,639, குணமடைந்தோர் – 32,96,299பிரேசில்       –    பாதிப்பு – 37,22,004, உயிரிழப்பு – 1,17,756, குணமடைந்தோர் – 29,08,848இந்தியா       –    பாதிப்பு – 33,07,749, உயிரிழப்பு –  60,629, குணமடைந்தோர்  – 25,23,443ரஷியா        –    பாதிப்பு –  9,70,865, உயிரிழப்பு –  16,683, குணமடைந்தோர்  –  7,86,150தென் ஆப்பிரிக்கா – பாதிப்பு –  6,15,701, உயிரிழப்பு –  13,502, குணமடைந்தோர்  –  5,25,242

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply