காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்திற்கு சமாந்தரமாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வண. தெரிபெஹே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேரர் இன்று காலை நோயாளர் காவு வண்டி மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, வண.மாத்தறை விமலதம்ம தேரர் இன்று அந்த இடத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
காலி முகத்திடல் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் இன்று 14 ஆவது நாளாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.
Follow on social media