ஆடவருக்கான 150 மீட்டர் ஓட்டப் போட்டியை 15.16 வினாடிகளில் நிறைவுசெய்து தெற்காசியாவின் அதிவேக இலங்கை வீரர் யுபுன் அபேகோன் புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார்.
இத்தாலியில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற பேர்சோ கிண்ணம் 2022 மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 150 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டு இத்தாலி வீரர்களின் சவால்களை முறியடித்து யுபுன் அபேகோன் வெற்றிபெற்று புதிய ஆசிய சாதனையை படைத்தார்
அப்போட்டியை 15.16 செக்கன்களில் நிறைவு செய்த யுபுன் அபேகோன், இந் நிகழ்ச்சிக்கான புதிய ஆசிய சாதனையை நிலைநாட்டினார்.
Follow on social media