இலங்கை உதைபந்தாட்ட வீரர் டக்ஸன் பியூஸ்லஸ் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் நேற்று (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவரே மேற்படி உயிரிழந்துள்ளார்.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார்.

இலங்கை அணியின் தேசிய அணியில் இடம் பிடித்த இவர், கால்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகான் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அதே நேரம் இலங்கை தேசிய அணியில் சிறந்த பின் கள வீரராக விளங்கினார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற SAFF கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில், இந்திய அணியுடனான போட்டியில் சிறந்த வீரருக்கான விருந்தினை பெற்றுக்கொண்டார்.

இந்த போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. இவ்வருடத்திற்கான மிக பிரபலமான வீரருக்காக இடம் பெற்ற கருத்து கணிப்பில் ரன்னரப்பாக பியூஸ்லஸ் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Follow on social media
CALL NOWPremium Web Hosting