நாளை முதல் ஒரு வார காலத்துக்கு இலங்கை முழுவதும் ஹர்த்தாலை அனுஷ்டிக்கவுள்ளதாக 300 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கமைய, நாளை முதல் இம்மாதம் 28ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகவலை தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்லதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
Follow on social media