இந்நாட்டு இளைஞர்களுக்கிடையே எச்.ஐ.வி தொற்று படிப்படியாக அதிகரிக்கும் அவதானம் நிலவுவதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.
அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரசாங்ஜலி ஹெட்டியாராச்சி இதனை குறிப்பிட்டார்.
19 க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகின்றமை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், நாட்டினுள் 3600 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இவர்களில் சுமார் இரண்டாயிரம் பேர் மாத்திரமே சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Follow on social media