விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளுர் உணவு உற்பத்தியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்நாட்டு மக்கள் விரைவில் உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் என விவசாய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் நெல் அறுவடை 45 வீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாகவும் விவசாய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் யூரியா உரத்தின் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடைகளில் 50 கிலோ யூரியா உர மூட்டை 40 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow on social media