நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் மூன்று மணித்தியாலத்திற்கும் அதிகளவான காலம் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, A முதல் W வரையான வலயங்களில் முற்பகல் 9.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த வலயங்களில் மாலை 5.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அதேசமயம் , CC வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் மூன்று மணித்தியாலம் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Follow on social media