வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியின் மத்தியில் நிலைகொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த பிரதேசம் தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக மையம் கொண்டிருக்கும் நிலையில்,
அடுத்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு- வடகிழக்கு திசையில் அந்தமான கடற்பரப்புகளை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மார்ச் 21 ஆம் திகதியளவில் ஒரு சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் (03S – 11N, 886E – 96E) மறு அறிவித்தல்வரை
நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு
வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
Follow on social media