இரவு பகலாக 7வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கொழும்பு காலி முகத்திடலில் 7வது நாளாக ஆர்ப்பாட்டம் இன்றும் (15) தொடர்கிறது.

நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் கலந்து கொண்ட இந்தப் ஆர்ப்பாட்டம் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமானது.

அதன்படி, இரவு பகலாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சித்திரை புத்தாண்டு தினமான நேற்று பெரும் எண்ணிக்கையிலான மக்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று இரவும் காலி முகத்திடல் மற்றும் காலி வீதியில் மக்கள் திரண்டதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting