இன்று முதல் 3 நாட்களுக்கான மின் வெட்டு குறித்த அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு நாளாந்தம் 4 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்த திட்டமிடப்பட்டது.

எவ்வாறாயினும், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு போதிய எரிபொருள் கிடைக்கப்பெற்றதன் காரணமாக மின்வெட்டு ஒரு மணித்தியாலத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த மூன்று நாட்களிலும் A முதல் L மற்றும் P முதல் W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முற்பகல் 9.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாகவுள்ளது.

அத்துடன் கொழும்பு நகர் பகுதியில் காலை 6 மணிமுதல் 9 மணிவரையான காலப்பகுதியில் 3மணி நேரம் மின் துண்டிப்பை அமுல்படுத்த பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply