லிட்ரோ 12.5 கிலோகிராம் வீட்டு சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று (26) நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, லிட்ரோ 12.5 கிலோகிராம் எரிவாயுவின் புதிய விலை 4,860 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த எரிவாயுவின் கொள்கலன் விலை 2,675 ரூபாவாக காணப்பட்டது. தற்போது அதன் விலை 2,185 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 22 ஆம்திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு விலையை 5,175 ரூபாவாக அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்திருந்தது.
எனினும், குறித்த விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்க முடியாது என்று அதனை நுகர்வோர் அதிகாரசபை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media