சட்டத்துக்குப் புறம்பாக கடல் வழியாக இந்தியாவுக்கு தங்கத்தை கடத்த முற்பட்ட இருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டத்துக்குப் புறம்பாக கடல் வழியாக பெருந்தொகை தங்கத்தை கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 6 கோடியே 20 லட்சம் ரூபாய் பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடை தங்கத்தை கடத்த முற்ப்பன்ன போது சந்தேக நபர்கள் இருவரும் இன்று அதிகாலை அனலைதீவு கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

மாதகலைச் சேர்ந்த இருவரும் தரகுப் பணத்துக்காக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காங்கேசன்துறை கடற்படையினரால் சந்தேக நபர்கள் இருவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்அவர் இருவரும் நீதிமன்ற நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மீட்கப்பட்ட 5 கிலோ 500 கிராம் தங்கமும் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் கடற்படையினர் கூறினர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply