ஆர்ப்பாட்ட களத்துக்குள் இராணுவத்தை இறக்கி வன்முறை ஒன்றை தோற்றுவிக்க உள்ளதாக முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரசார செயலாளரான துமிந்த நாகமுவ துமிந்த நாகமுவ இன்று ஊடகங்கள் வழியாக சிகப்பு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
சனி – ஞாயிறு தினங்களில் மக்கள் போராட்ட களத்துக்கு வரக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
அதை தடுத்து ஆர்ப்பாட்ட பூமியில் கலவரம் ஒன்றை உருவாக்க முயற்சியொன்று நடைபெறுவதாக அவர் ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் ஊடாக அறிவுறுத்தியுள்ளார்.
அத்தோடு அதற்கான பயிற்சியில் இராணுவம் ஈடுபடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
Follow on social media