சேலம் மல்லூர் வேங்காம்பட்டி கோயில் திருவிழாவின் கடைசி நாளில் திரை இசை கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபல தமிழ் சினிமா நடிகையும், பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா கலந்துகொண்டார். மேடைக்கு அருகில் ஆண்ட்ரியாவை காண ரசிகர்கள் முந்திக்கண்டு மேலே ஏற முற்பட்டதால் போலீசார் அனைவரையும் விரட்டியடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பிரபல சினிமா பாடல்களை நடிகை ஆண்ட்ரியா பாடிய நிலையில் நடனமாட வேண்டும் என்று ரசிகர்கள் கத்தியதால் ஆண்ட்ரியா கோபமாகி அமைதியாக நின்றார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்து நடிகை ஆண்ட்ரியா கிளம்பியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow on social media