அரசுக்கு எதிராக பேசிய பொலிஸ் அதிகாரி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 6ஆவது நாளாகவும் தொடர்ந்து செல்கின்றது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக இரத்தினபுரி சிறிபாகம – குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துகொண்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், நாளை நான் இந்த பதவியில் இருக்கமாட்டேன், இன்று நான் இங்கு வந்துள்ளேன். என்னைப் போல முதுகெழும்பு உள்ள நாட்டின் நெருக்கடி நிலைமையை புரிந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகள் இங்கு வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குறித்த அதிகாரியை தற்போது பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply