அஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் AK 61 படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடக்கிறது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக எச்.வினோத் டைரக்‌ஷனில் அஜித் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

ஜிப்ரான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்திற்காக இரண்டு பாடல்களுக்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

கல்லூரி பேராசிரியராக அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் நடக்கிறது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இப்படத்திற்காக ராமோஜி பிலிம் சிட்டியில் மவுண்ட் ரோடு போன்று செட் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply