அச்சுவேலி வங்கி உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தலில்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தேசிய சேமிப்பு வங்கியின் அச்சுவேலி கிளை முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்துமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு பணித்துள்ளனர்.

கடந்த டிசெம்பர் 22ஆம் திகதி தேசிய சேமிப்பு வங்கிக் கிளைக்குச் சென்ற இராணுவ உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியட்டப்பட்ட நிலையில் இந்த பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பணியாற்றும் இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் தனது விடுமுறைக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். அவர் கடந்த டிசெம்பர் 22ஆம் திகதி தேசிய சேமிப்பு வங்கியின் அச்சுவேலிக் கிளைக்கும் சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த இராணுவ உத்தியோகத்தர் கொழும்பு திரும்பிய நிலையில் கடந்த 30ஆம் திகதி புதன்கிழமை பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட அறிவித்தல்களின் அடிப்படையில் தேசிய சேமிப்பு வங்கியின் அச்சுவேலிக் கிளை முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் இன்று(02) தொடக்கம் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு நாளைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு கிடைக்கும் முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply