பாரிய அடையாள வேலை நிறுத்த போராட்டம் -1000 தொழிற்சங்கங்கள் ஆதரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இன்று (28) பாரிய அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

கல்வி, போக்குவரத்து, தோட்டம், துறைமுகம், மின்சாரம், தபால், சமுர்த்தி, வங்கி, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் தொழிற்சங்கப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் நண்பகல் 12.00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய எதிர்ப்பு பேரணியை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கம் ஏழு நாட்களுக்குள் பதவி விலகாவிட்டால் எதிர்காலத்தில் தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சுமார் 50 சதவீத வைத்தியசாலை ஊழியர்களும் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting