சீமெந்தின் விலையை உயர்த்துவதற்கு திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்து சீமெந்தின் விலையை 500 ரூபாய் தொடக்கம் 600 ரூபாயினால் உயர்த்த சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக விற்பனையாளர்கள் தொிவிக்கின்றனர்.

சந்தையில் தற்போது 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடை ரூ.2300 – 2350 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதால், சீமெந்தின் புதிய விலையை ரூ.500 – 600 ரூபாவால் உயர்த்த சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

சீமெந்து விலை உயர்ந்துள்ளதாலும், புதிய கட்டிடங்களின் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளதாலும் சீமெந்தின் தேவை குறைந்துள்ளதாகவும், இதனால் மொத்த விற்பனைக் கடைகளில் சீமெந்து இருப்பு இல்லை எனவும்

சிமெந்து விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting