அக்மீமன பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் 28 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 2 யுவதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கடந்த காலங்களிலும் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் போதைப் பொருட்களுடன் இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media