சீனா இப்போது தொழில்நுட்பத் தளத்தில் படுவேகமாக முன்னேறி வருகிறது. இந்நிலையில் உலகிலேயே முதல் முதலாக செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபாவை வழக்குகளை விசாரித்து தீர்ப்பு அளிக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
இந்த ரோபோ 97 சதவீதம் துல்லியமான தீர்ப்புகளைக் கூறும் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் வழக்கறிஞர்களின் பணிச்சுமை குறையும் என்றும் சொல்லப்படுகிறது.
கிரெடிட் கார்ட் மோசடி, திருட்டு மற்றும் விபத்து போன்ற வழக்குகளை இதனால் கையாளமுடியும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த ரோபோவுக்கு உள்ளீடாக 2015 முதல் 2020 வரையிலான வழக்குகள் மற்றும் தீர்ப்புகளின் தகவல்கள் உள்ளீடாக வழங்கப்பட்டுள்ளனவாம்.
இதனை அடிப்படையாக வைத்தே இது தீர்ப்புகளை வழங்கி வருகிறது என்கிறார்கள். என்ன கொடுமை சரவணா ? ஆனால் இந்த ரோபோ மிகவும் தேவைப்படும் நாடு இந்தியா மற்றும் இலங்கை தான்
Follow on social media