மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கி பலாத்காரம் – 3 பேர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மரண வீடொன்றுக்கு சென்றிருந்தபோது நிறைபோதையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கி காயப்படுத்திய 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மது போதையில் வந்த மூவர் தாக்கிவிட்டு தலைமறைவாகியிருந்தனர்.இதில் படுகாயமடைந்த பெண் 1990 என்ற அவசர அம்புலன்ஸ் வண்டியின் ஊடாக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இதன்போது அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த பட்டுள்ளதாக வைத்திய அதிகாரியின் அறிக்கை ஊடாக உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தை சேர்ந்த 49 வயதுடைய பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் தொடர்ந்தும் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இம்மாதம் 16ம் திகதி டியன்சின் தோட்டத்தில் மரண நிகழ்வு ஒன்று இடம் பெற்றிருந்த போதே இந்த சம்பவம் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting