வீரமே வாகைச்சூடும் படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், தற்போது லத்தி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
விஷால் நடிப்பில் தற்போது வீரமே வாகைச்சூடும் திரைப்படம் வெளியானது. இப்படத்தை அடுத்து லத்தி படத்தில் நடித்து வருகிறார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தில் இடம் பெறும் பிரமாண்டமான கிளைமாக்ஸ் காட்சி ஐதராபாத்தில் நடந்தது. கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டுமே 30 நாட்கள் திட்டம் போட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தார் பீட்டர் ஹெயின் மாஸ்டர். அடியாட்களுடன் மோதிக் கொண்டு குழந்தையுடன் கீழே குதிக்கும் காட்சியில் காங்ரீட் சுவற்றில் மோதி விஷாலுக்கு கையில் அடிப்பட்டது.
சில மணிநேரம் டிரீட்மெண்ட் எடுத்து விட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடர்ந்தார் விஷால். கை வலியுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவருக்கு மேலும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளமுடியாமல் போனது. இதனால், நடிகர் விஷால் சிகிச்சைக்காக கேரளா சென்றிருக்கிறார். லத்தி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் மார்ச் மாதம் தொடரும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Follow on social media