உலகமே வியந்து பார்க்கும் நம் வல்வெட்டித்துறை மண்ணை சீரழிக்கும் நோக்கோடு செயற்படும் சில புல்லுருவிகளான அரசியல் வாதிகளின் துணையோடு வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் இருக்கும் village hotel தற்போது முழுநேர சாராய பார் ஆக செயட்பட ஆரம்பித்திருக்கிறது.
அருகில் பாடசாலை, முதியோர் இல்லம், பல மக்கள் நெருக்கமாக வாழும் ஊரிக்காட்டில் சிலரது சுயநல லாபத்துக்காக கொடுக்கப்பட்ட சாராய அனுதி இன்று பாரிய அழிவை நோக்கி நகர்வதை காண முடிகிறது.
சில குடிகார நாய்கள் குடித்துவிட்டு வீதிகளில் அடிபடுவதும் வெற்று போத்தல்களை வீதி ஓரங்களில் வீசிச்செல்வதும் இவற்றுக்குமேல் வயது குறைந்த சிறுவர்களும் குடித்துவிட்டு செல்வதை பார்க்க முடிகிறது.
நம் தமிழர் பாரம்பரியம் கலாச்சாரங்களை பாதுகாக்கவே அன்று வல்வையைச் சேர்ந்த அனந்தராசா அவர்களால் வல்வெட்டித்துறையில் இயங்கிவந்த சாராய பார் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நம் இளம் சமுதாயத்தை நாசமாக்கும் நோக்கோடு செயட்படும் சிங்கள பேரினவாத அரசின் கைக்கூலிகளான சில புலம்பெயர் தமிழர்களால் வல்வெட்டித்துறை மண் சீரழியப்போவது தான் நிதர்சனம்
Follow on social media