கொழும்பு ஓஷன் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவி ஒருவர் நேற்று(11.02.2023) பிற்பகல் சிலாபம் கடற்கரையில் நீராட சென்று போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
60 பேர் கொண்ட குழு ஒன்று சுற்றுலா சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கமைய சிலாபம் கடற்கரையில் நீராட சென்று குறித்த மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், அவரது சடலத்தை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கி காணாமல் போன மாணவியை கண்டுபிடிக்க சிலாபம் பொலிஸார் மற்றும் கடற்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
Follow on social media