Skip to content
Ra Tamil
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • சர்வதேசம்
  • கல்வி
  • சினிமா
  • வர்த்தகம்
  • ஆரோக்கியம்
  • நம்மவர் படைப்புகள்
Menu

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Posted on September 16, 2023

இன்று (16ஆம் திகதி) மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயத்தைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

Follow on social media
  • Facebook
  • Facebook Group
  • Twitter
  • YouTube
  • WhatsApp
  • Telegram
  • Google News

RA TAMIL

©2025 Ra Tamil | Design: Newspaperly WordPress Theme