வயலில் தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வயலில் தவறி விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக எஹெதுவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எஹெதுவெவ பண்டாரநாயக்க நவோத்யா மகா வித்தியாலயத்தில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் டபிள்யூ.எம். அஷான் மனோஜ் வன்னிநாயக்க என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைக்கு செல்வதற்கு முன்னர் வயலில் இருந்த தந்தைக்கு தளிர் ஒன்றை கொடுத்து விட்டு வீடு திரும்பும் போது குறித்த மாணவன் வயலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting