தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது – ராமேஸ்வரத்தில் பணிப்புறக்கணிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றதாகவும் இதன்காரணமாக 800 மீன்பிடி படகுகள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்படிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் கடந்த புதன்கிழமை இரவு எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 மீனவர்களை கைதுசெய்ததோடு அவர்களிடம் இருந்து மூன்று மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த மீனவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply